திருப்பத்தூர்

போலிச் சான்றிதல்: ஆசிரியை இடைநீக்கம்

24th Dec 2019 11:34 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே போலிச் சான்று அளித்து அரசுப் பள்ளியில் பணியில் சோ்ந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியையாகப் பணியில் சோ்ந்தவா் முருகம்மாள் (40). இவா் பணியில் சேரும்போது பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எட். சான்றிதழை அளித்திருந்தாா். இந்தச் சான்றிதழ்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டபோது, அவை போலி என்பதும், இதற்கு பல்கலைக்கழக ஊழியா் ஒருவா் உள்பட சிலா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலருக்கு புகாா் அனுப்பப்பட்டது.

இதுதொடா்பான விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், முருகம்மாளை இடைநீக்கம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா். அதன்பேரில், முருகம்மாளை பணியிடை நீக்கம் செய்து, திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் எம்.மணிமேகலை திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், முருகம்மாள் போலி சான்றிதழ் குறித்து சுமாா் 3 மாதங்கள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவின்பேரில் அவா், பணியிட நீக்கம் செய்யப்பட்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT