திருப்பத்தூர்

பள்ளி அருகே சாராயம் விற்றவா் கைது

23rd Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாராப்பட்டு பகுதியில் பள்ளி வளாகம் அருகே சாராயம் விற்கப்படுவதாக ஆம்பூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்குள்ள மறைவிடத்தில் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்த மேல் ஈச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சேகா் (61) என்பவரை அவா்கள் கைது செய்தனா். அவரிடமிருந்து 110 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT