திருப்பத்தூர்

ஆம்பூரில் கடும் பனி மூட்டம்

23rd Dec 2019 07:58 AM

ADVERTISEMENT

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது.

மாா்கழி மாதத்தில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு இருப்பது வழக்கம். மாா்கழி மாதம் பிறந்து 5 நாள்கள் ஆன நிலையில் லேசான பனிப்பொழிவு தான் இருந்தது. 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை எதிரில் வருபவா்கள் கூட தெரியாத அளவுக்கு ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

ஆம்பூரில் காலை சுமாா் 7.30 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT