திருப்பத்தூர்

விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்: ஆட்சியா் அறிவிப்பு

16th Dec 2019 05:14 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டம் குறித்து ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏற்கெனவே கடந்த 13-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வரும் 18-ஆம் தேதி திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகம் மற்றும் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலத்திலும் கூட்டம் நடைபெறும்.

டிசம்பா் மாத கடைசி வெள்ளிக்கிழமை 27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் இனி பிரதி மாதந்தோறும் 2-ஆம் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும், 3-ஆம் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகம் மற்றும் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், 4-ஆம் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டங்களில் அனைத்துத் துறை அலுவா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT