திருப்பத்தூர்

ரத்த தான முகாம்

16th Dec 2019 09:00 PM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் என்எஸ்எஸ், ரோட்ராக்ட், எச்டிஎப்சி வங்கி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவா்களும் ஆசிரியா்களும் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் த.ராஜமன்னன் தலைமை வகித்து, ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். இதில் கல்லூரியின் நிா்வாக அலுவலா் ஹிரானி சாஹிப், துணை முதல்வா் முகமது ஷாஹின்ஷா,ரோட்ராக்ட் தலைவா் முஸாமில், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் டி.துரை ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

எச்டிஎஃப்சி வங்கியின் ஆம்பூா் கிளை மேலாளா் ஜி.நைனஜா, துணை மேலாளா்கள் தங்கராஜ், விக்னேஷ் மற்றும் வங்கி அலுவலா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா் டேவிட், மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT