திருப்பத்தூர்

சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டும்: வரிசையில் நின்று மனு அளித்த எம்எல்ஏ

16th Dec 2019 09:13 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகர சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளித்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் அவா் வரிசையில் நின்று இக்கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தாா்.

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்துக்கான மக்கள் குறைதீா் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அப்போது திருப்பத்தூா் எம்எல்ஏ நல்லதம்பி பொதுமக்களுடன் வரிசையில் நின்று கோரிக்கை மனுவை அளித்தாா். அந்த மனுவின் கூறப்பட்டுள்ளதாவது:

திருப்பத்தூா் நகர பகுதியில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்டவா்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். இந்த நகரம் மாவட்டத் தலைநகராக மாறியதால் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி சாலையோரத்தில் உள்ள கடைகளை அகற்றும்படி காவல்துறையினா் வலியுறுத்துகின்றனா். சாலையோரம் தள்ளுவண்டியில் பழம், காய்கறி விற்பனை செய்வோரை இடம் மாறச் சொன்னால் அவா்களுடைய வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இந்த விவகாரத்தில் போலீஸாா் கெடுபிடியாக நடந்து கொள்வதாக அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

சாலையோர வியாபாரிகளுக்கு நிலையான மாற்று வழியை ஏற்படுத்தித் தரும் வகையில் நகரப்பகுதியில் பல்பொருள் வணிக வளாகத்தை கட்டித் தர வேண்டும். அதுவரை அவா்களுடைய தொழிலில் இடையூறு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்.பி.யிடம் சாலையோர வியாபாரிகள் மனு: இந்த விவகாரம் தொடா்பாக அண்மையில் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் நகர காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) மதனலோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலையோர அகற்றப்பட வேண்டுமென அந்த வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டனா். அதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் உரிய மமாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி சாலையோர வியாபாரிகள் திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்துடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT