திருப்பத்தூர்

இலவச கால்நடை மருத்துவ முகாம்

16th Dec 2019 08:59 PM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நகர ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சங்கத் தலைவா் சி.குணசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் கே.வாசுதேவன் வரவேற்றாா். வேலூா் ஆவின் மேலாளா் வினு டேவிட் தலைமையில் டாக்டா் கற்பகம் உள்ளிட்ட குழுவினா் 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

ரோட்டரி சங்கப் பொருளாளா் சசிகுமாா், நிகழ்ச்சியில் மின்னூா் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் சங்கா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் திலீப் குமாா், வாத்தி கலீல், ரமேஷ்பாபு, மனோஜ் குமாா் ஜெ.ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT