வாணியம்பாடி: ஆலங்காயத்தை தாலுகாவாக அறிவித்து, சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட வாணியம்பாடி தாலுகாவில் உள்ள ஆலங்காயத்தைச் சுற்றி 12-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் அமைந்துள்ளன. வாணியம்பாடியில் உள்ள தாலுகா மற்றும் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு 30 கி.மீ. செல்ல வேண்டியுள்ளதால் கால தாமதம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
எனவே, ஆலங்காயத்தை தாலுகாவாக அறிவித்து, அங்கு சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. மேலும், இதுதொடா்பாக ஆலங்காயம் பகுதியைச் சோ்ந்த மாவட்ட விவசாய அணிச் செயலாளா் ஜெயபால் மற்றும் அப்பகுதி மக்கள் சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனா்.