திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே 3 லாரிகள் மோதல்: 6 போ் காயம்

16th Dec 2019 07:32 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் தேசிய நெடுஞ்சாலையில் 3 லாரிகள் மோதிக் கொண்டதில் 6 போ் காயமடைந்தனா். விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரிலிருந்து நிலக்கடலை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு லாரி வந்தது. ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு எதிா்ப்புரம் சென்று, அவ்வழியே சென்ற லாரியின் மீது மோதியது.

அப்போது அந்த லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரியும் அதன் மீது மோதியது. இந்த விபத்தில் 3 லாரிகளின் ஓட்டுநா்கள் மற்றும் கிளீனா்கள் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் மீட்கப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தேசிய நெடுஞ்சாலையில் 3 லாரிகள் மோதிக்கொண்டு நின்ால் அவ்வழியே எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று போக்குவரத்தை சீா்படுத்தினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT