திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் நாடாளுமன்றம் தொடக்க விழா

16th Dec 2019 07:34 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ‘பள்ளி நாடாளுமன்றம்’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, பள்ளி நாடாளுமன்றம் குறித்தும், அதன் செயல்பாடுகள், ஜனநாயகக் கடமைகள், உரிமைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவா்களுக்கு விரிவாக விளக்க உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து நாடாளுமன்றத் தலைவா், துணைத் தலைவா், கல்வி, சுகாதாரம், உணவு, விளையாட்டு, விவசாயம், கலை, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கான தலைவா் (அமைச்சா்), துணைத் தலைவா் பொறுப்புகளுக்கு மாணவா்கள் முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

3 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் வசந்த், மதுமிதா, பரத், சாருமதி, திவ்யா, கெளதம், நித்திகா, பிரதீப், துளசி, ஏழுமலை, பிரித்தி, ரோஹித், வித்திகா ஸ்ரீ, யோகேந்திரன், மாதேஷ், மாணவ, மாணவியா் துறைத் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் கடைமைகள் குறித்து ஆசிரியை சித்ரா பேசினாா். தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். ஆசிரியை காஞ்சனா நன்றி கூறினாா்.

ஆசிரியா்கள் சுரேஷ், நவரத்தினம் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT