திருப்பத்தூர்

ரூ.46 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை அமைச்சா் கே.சி.வீரமணி திறந்து வைத்தாா்

11th Dec 2019 11:31 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை தொகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி திறந்து வைத்தாா்.

பாச்சல் ஊராட்சி ஜெய்பீம் நகா் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா கட்டப்பட்டுள்ளன. அவற்றை அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து தாமலேரிமுத்தூா் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தையும் அவா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து அவா் பேசியதாவது:

ஜோலாா்பேட்டை தொகுதியில் பல்வேறு அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகள் முதல் இளைஞா்கள் வரை அனைவரும் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக் குழந்தைகளும், சிறுவா்களும் விளையாடி மகிழ்வதற்கும் இளைப்பாறுவதற்கும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தாமலேரிமுத்தூா் பகுதியில் முதன்முறையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வரும். அவ்வாறு பெறப்படும் தண்ணீரைக் குடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தக் குடிநீருக்காக நீங்கள் செலுத்தும் தொகை சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிக்கு மட்டுமே பயன்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில்,ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.ரமேஷ், பாச்சல் ஊராட்சி செயலாளா் பெருமாள் மற்றும் அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT