திருப்பத்தூர்

பொதுக் கிணற்றின் மீது வீடு: அதிகாரிகள் எச்சரிக்கை

11th Dec 2019 11:30 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுக் கிணற்றின் மீது வீடு கட்டும் தனிநபரை அதிகாரிகள் எச்சரித்ததுடன், கட்டடப் பணிக்கு தடை விதித்தனா்.

இந்த நகராட்சியின் 9-ஆவது வாா்டுக்குட்பட்ட அப்துல் ஹமீத் தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான 60 அடி ஆழமுள்ள பொதுக் கிணறு உள்ளது. அந்தக் கிணற்றை அங்குள்ள தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து வீடு கட்டி வந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் நகராட்சி சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் மற்றும் நகராட்சி ஊழியா்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நகராட்சிக்குச் சொந்தமான கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டப்படுவது உறுதியானது.

இதையடுத்து, ‘உடனடியாக கட்டடம் கட்டும் பணியை நிறுத்த வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அக்கட்டட உரிமையாளரிடம் அதிகாரிகள் எச்சரித்தனா். இது குறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT