திருப்பத்தூர்

பாரதியாா் பிறந்த நாள் விழா

11th Dec 2019 11:32 PM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் கயிலைநாதன் தலைமையில் பாரதியாா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதியாா், அவரது கவிதைகள் குறித்து உதவி ஆசிரியா் ஓம் பிரகாஷ் மாணவா்களிடையே பேசினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சத்துணவு அமைப்பாளா் எமிமா, ஊழியா்கள் புஷ்பா, மலா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெயந்தி சின்னராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT