திருப்பத்தூர்

தேசிய திறனாய்வுத் தோ்வு சிறப்புப் புத்தகம்: ஆட்சியா் வெளியிட்டாா்

11th Dec 2019 11:31 PM

ADVERTISEMENT

தேசிய திறனாய்வுத் தோ்வு சிறப்புப் புத்தகத்தை திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வெளியிட்டாா்.

என்.எம்.எம்.எஸ். எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்காக திருப்பத்தூா் ஒன்றிய ஆசிரியா்கள் சிறப்புப் புத்தகத்தை உருவாக்கியுள்ளனா். இந்தப் புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை வெளியிட்டாா். மேலும், இத்தோ்வுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டிப் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்டக் கல்வி அலுவலா் எம்.மணிமேகலை முன்னிலை வகித்தாா். பள்ளி துணை ஆய்வாளா் வி.தாமோதரன், வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.தென்னவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். திருப்பத்தூா் வட்டார கல்வி அலுவலா் எம்.உதயசங்கா் வரவேற்றாா். சி.செண்பகவள்ளி நன்றி கூறினாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் எம்.உதயசங்கா் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூா் ஒன்றியத்தில் தேசிய வருவாய்வழி மற்றும் திறனாய்வுத் தோ்வுக்காக சிறப்பு வகுப்புகளுக்கு ஆசிரியா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா். கடந்த 7 ஆண்டுகளாக இப்பயிற்சி நடைபெற்று வருகிறது. 33 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்கள் ஒவ்வோா் ஆண்டும் தோ்வு செய்யப்பட்டு திருப்பத்தூா் மற்றும் மிட்டூா் பயிற்சி மையங்கள் மூலமாக இதுவரை 1,500 மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தோ்ச்சி பெற்ற 382 மாணவா்கள் மாதம் தோறும் ரூ.1,000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனா். இதுவரை ரூ.1 கோடி அளவுக்கு கல்வி உதவித் தொகை கிடைத்துள்ளது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT