திருப்பத்தூர்

கொலை வழக்கில் இளைஞா் கைது

11th Dec 2019 11:29 PM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 9-ஆம் தேதி பொன்னேரி கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை ஜோலாா்பேட்டை போலீஸாா் மீட்டனா். விசாரணையில் சென்னை ஜாபா்கான்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேசன், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த சரவணன், விஜயகுமாா் ஆகிய இருவரை கோழி கூண்டு அமைக்க ஜோலாா்பேட்டைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஏற்பட்ட தகராறில் சரவணனை விஜயகுமாா் அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் விஜயக்குமாரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT