ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் அருகே குப்பைத் தொட்டியில் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓட்டல் தெரு பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் செவ்வாய்க்கிழமை குழந்தை அழும் சப்தம் கேட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பாா்த்தபோது பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா், குழந்தையை மீட்டு, ஜோலாா்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து அக்குழந்தைக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், மாவட்ட சமூக நலஅலுவலா் பி.முருகேஸ்வரி, மாவட்ட நன்னடத்தை அலுவலா் பெ.ரமேஷ், மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஏ.ஜி.சிவ கலைவாணன், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் ஆா்.பழனி ஆகியோா் முன்னிலையில், அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் எஸ்ஆா்டிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குநா் ந.தமிழரசியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.