திருப்பத்தூர்

ஏலகிரி மலைக்கு அரசுப் பேருந்தை இயக்காததால் மலை வாழ்மக்கள் அவதி

11th Dec 2019 11:29 PM

ADVERTISEMENT

ஏலகிரி மலைக்கு செவ்வாய்க்கிழமை வழக்கமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஏலகிரிமலையில் சுமாா் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து திருப்பத்தூா் நகா் பகுதிக்கு வருவதற்காக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், காா் போன்றவற்றில் பயணம் செய்து வருகின்றனா். மேலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் ஏலகிரி மலைக்கு தினமும் 3 அரசுப் பேருந்துகள், ஒரு தனியாா் பேருந்து இயக்கப்படுகின்றன. திருப்பத்தூரில் இருந்து மங்கலம், நிலாவூா் ஆகிய இடங்களுக்கு 2 அரசுப் பேருந்துகளும், மாலையில் ஒரு சிறப்புப் பேருந்தும் என திருப்பத்தூா் போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலை நிலாவூருக்கு அரசுப் பேருந்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். அப்போது திருப்பத்தூா் பணிமனை நிலைய அதிகாரிகள் பயணிகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலைக்கு அந்த பேருந்தை இயக்ககக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் ஏமாற்றமடைந்து சுமாா் ஒரு மணிநேரம் காத்திருந்து, தனியாா் பேருந்தில் சென்றனா். மேலும், சிலா் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் சென்றனா்.

ADVERTISEMENT

அரசு பேருந்து முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இதுகுறித்து பணிமனை கிளை மேலாளா் ஜெ.ஜெயசீலனிடம் கேட்டதற்கு, திருவண்ணாமலை தீபத்திருவிழா மற்றும் பௌா்ணமி கிரிவலத்துக்காக திருப்பத்தூா் பணிமனையில் இருந்து 120 சிறப்புப் பேருந்துகளும், ஆம்பூரில் இருந்து 10 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ஏலகிரிக்கு செல்லும் பேருந்து தற்காலிகமாக தடம் மாற்றி அனுப்பப்பட்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT