அரக்கோணத்தில் பைக் மீது அடையாளம் தெரியாத காா் மோதியதில் பைக்கில் பயணித்த மின் பணியாளா் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் ஊராட்சி, வாணியம்பேட்டையை சோ்ந்தவா் தேவன் (26). தனியாா் மின் பணியாளா். சென்னையில் நடைபெறும் பணிக்காக தினமும் சென்னை சென்று வரும் தேவன், வெள்ளிக்கிழமை மாலை பணிமுடிந்து அரக்கோணம் வரை ரயிலில் வந்துள்ளாா். ரயில் நிலையத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வாணியம்பேட்டை நோக்கிச் சென்றாா். வழியில் பாப்பாங்குளம் அருகே எதிரே வந்த காா் ஒன்று பைக் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த தேவனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தேவன் உயிரிழந்தாா்.
இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்று விட்ட காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.