ஆற்காடு அடுத்த பூங்கோடு ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஸ்ரீஅஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றன. ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.