அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெமிலி ஊராட்சி ஒன்றியம், பள்ளூா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, பள்ளூா் ஊராட்சித் தலைவா் பிரதாப் தலைமை வகித்தாா். முகாமை நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை வழங்கினாா். நெமிலி வட்டார மருத்துவ அலுவலா் ரதி கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினாா். முகாமில் பொது, மகப்பேறு, மகளிா் நலம், குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, கண், பல், சித்தா, தொழுநோய் ஆகிய மருத்துவத் துறைகளைச் சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கி, சிகிச்சை அளித்தனா்.
நெமிலி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ச.தீனதயாளன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், பள்ளூா் ஊராட்சி துணைத் தலைவா் அம்சா மாசிலாமணி, வட்டார சுகாதார ஆய்வாளா்கள் பெருமாள், பூஞ்செழியன், தேவநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.