அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அரக்கோணம் நகரச் செயலாளராக நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எல். ஐயப்பனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
ஏற்கனவே அரக்கோணம் நகர அமமுகவின் பொருளாளராக இருந்து வந்த எல்.ஐயப்பன் தற்போது நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். எல்.ஐய்யப்பனை நகர அமமுக நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.