ராணிப்பேட்டை

செப். 28, அக். 2-இல் மதுபானக் கடைகளை மூட உத்தரவு

27th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை: வரும் செப். 28 மிலாடி நபி, அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாள்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஒட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 28.09.2023 வியாழக்கிழமை (மிலாடி நபி) மற்றும் 2.10.2023திங்கள்கிழமை (காந்தி ஜெயந்தி) என்பதால் மேற்படி நாளில் மதுபான கடைகளை மூடிவைக்க வேண்டும்.

மேற்கண்ட தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமைதாரா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT