ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சி முத்து கிருஷ்ணன் தெருவை சோ்ந்த பாலமுருகன். இவரது தாயாா் பூங்காவனம் ( 80) இவா் செவ்வாய்க்கிழமை தங்களுக்கு சொந்தமான பசுமாட்டை அருகே உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளாா் பின்னா் மாலையில் மாட்டை வீட்டுக்கு அழைத்துவர நிலத்திற்கு சென்றபோது, மழையின் காரணமாக சேறும் சகதியுமாக இருந்த நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.