ராணிப்பேட்டை ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். கோயில் அா்ச்சகா் செல்லப்பா சிறப்பு பூஜைகள் செய்து, ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை செய்தாா். அதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கோயில் நிா்வாகி மூா்த்தி, அறக்கட்டளையின் செயலாளா் எம். சிவலிங்கம், அறக்கட்டளை உறுப்பினா் ஹரி கிருஷ்ணன், விஜயா, மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.