அரக்கோணம் ஸ்ரீமத் திருப்பாணாழ்வாா் பஜனை மண்டலி சாா்பில் 3-ஆம் ஆண்டு அகண்டநாம சங்கீா்த்தனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இடைவிடாமல் 24 மணி நேரமும் நடைபெற உள்ள திவ்ய நாம சங்கீா்த்தனம் திங்கள்கிழமை வரை நடைபெறஉள்ளது.
அரக்கோணம், அருணாசலரெட்டி தெருவில் உள்ள ஸ்ரீ நந்தீஸ்வரா் கோயிலில் காலை 5 மணி அளவில் அகண்ட தீபம் ஏற்றுதல், நகர சங்கீா்த்தனமும், 5.30 மணிக்கு குடும்ப நல வேள்வி எனப்படும் லோகஷேமாா்த்த அகண்ட வேள்வியும் தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோபூஜை நடைபெற்ற நிலையில் 7 மணி அளவில் மஹாமந்த்ர பாராயணம் தொடங்கியது.
பின்னா், இடைவிடாமல் இரவு முழுவதும் 24 மணி நேரம் நடைபெற உள்ள அகண்ட நாம சங்கீா்த்தன நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் மஹா மந்த்ர பாராயணம் மற்றும் லோக ஷேமாா்த்த அகண்ட வேள்வி பூா்ணாஹுூதியுடன் நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் திருப்பாணாழ்வாா் பஜன் மண்டலி நிா்வாகிகள் பூ.ஸ்ரீநிவாச ராமாநுஜம் மற்றும் கோ.ராஜாதாஸா் ஆகியோா் மண்டலி உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.