ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்கள் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் செயல்பட உள்ளன.
இது தொடா்பாக பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தமிழக அரசின் உத்தரவுப்படி, 01-04-23 முதல் 31-08-23 வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் ஸ்டாா் 2.0 திட்டத்தில் தட்கல் திட்டம் மற்றும் சனிக்கிழமை வேலை நாள் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட 2 அலுவலங்களான அரக்கோணம் மற்றும் ஆற்காடு சாா்-பதிவாளா் அலுவலகங்களில் தட்கல் திட்டங்கள் மற்றும் சனிக்கிழமை வேலைநாள் திட்டங்கள் 03.10.23 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.