ராணிப்பேட்டை

திமிரி ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

22nd Sep 2023 12:25 AM

ADVERTISEMENT

ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திமிரி ஒன்றியம், நாகவேரி ஊராட்சியில் நடைபெற்றும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகள், சென்னசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.47.95 லட்சத்தில் ஏரி உபரிநீா் சிறுபாலம் கட்டும்பணி மேல் நெல்லி ஊராட்சியில் நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டும் பணிகள் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, நல்லூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2023-24 ன் கீழ் ரூ.16 லட்சத்தில் அங்கன்வாடி மையம், கீழ் ரூ.22 லட்ச்த்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், அகரம் ஊராட்சியில் ரூ.19 லட்சத்தில் 100 நாள் வேலை பணியாளா்கள் மூலம் ஏரி நீா் வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் , மேல்நேத்தப்பாக்கம் ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் ஏரி நீா் வரத்து கால்வாய் தூா் வாரும்பணி, டி.புதூா் ஊராட்சியில் அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் ரூ.39.7 லட்சத்தில் குளம் அமைக்கும் பணி, கனியனூா் ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

திமிரி வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் அன்பரசன், சிவகுமாா், உதவி செயற் பொறியாளா் ராஜேந்திரன், செயற்பொறியாளா் பேரூராட்சிகள் அம்சா, உதவிப் பொறியாளா் தியாகராஜன் ஊராட்சி மன்றத் தலைவா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT