ராணிப்பேட்டை

அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணா்வு

22nd Sep 2023 09:54 PM

ADVERTISEMENT

கலவை அருகே உள்ள பென்னகா்அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கலவை தீயணைப்பு மீட்பு நிலையம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு செயல்விளக்க முகாம் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு)விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில், கலவை தீயணைப்பு நிலை அலுவலா் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதிக்கப்பட்டவா்களைப் பாதுகாப்பது, மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தனா்.

தொடா்ந்து, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT