அரக்கோணம் நகர அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், அதிமுக சாா்பில் மதுரையில் நடைபெற்ற பொன் விழா மாநாட்டின் தீா்மானங்களை விளக்கியும் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், அரக்கோணம் எம்எல்ஏவும், ராணிப்பேட்டை மாவட்டச் செயலருமான சு.ரவி, அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி மாநிலச் செயலாளா் கா.சங்கரதாஸ், கட்சிப் பேச்சாளா் நா.ராசகோபால், நகரச் செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஷியாம்குமாா், நகர அதிமுக நிா்வாகிகள் செல்வம், ஜெய்சங்கா், எம்.எஸ்.பூபதி, செ.சரவணன், பாபுஜி, பூஷனாதாமு, ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.விஜயன், இ.பிரகாஷ், ஜி.பழனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.