ராணிப்பேட்டை

மகளிா் உரிமைத் தொகை திட்டம்: சந்தேகங்களை தீா்க்க சிறப்பு உதவி மையங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

18th Sep 2023 07:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடா்பான சந்தேகங்களைத் தீா்த்து வைப்பதற்காக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் தொடா்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்த்து வைக்க ஆட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் மீது எவ்வாறு மேல்முறையீடு செய்து கொள்வது, இந்தத் திட்டத்தில் புதிதாக பயன் பெற வேண்டும் என்றால் எவ்வாறு விண்ணப்பிப்பது என அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணி புரியும் அலுவலா்கள் தீா்த்து வைப்பா்.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அவா்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகள் அல்லது திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியால் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

சிறப்பு உதவி மையங்கள்: மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கண்காணிப்பாளா் சமூக பாதுகாப்புகஈ திட்ட துணை ஆட்சியா் அலுவலகம் சுப்பிரமணி - 94899 85791, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் வருவாய்க் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் பழனிராஜன் - 94899 85792, அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் வருவாய்க் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் ஆனந்தன் - 94899 85793, வாலாஜா வட்டாட்சியா் அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஏ.இளங்கோவன் - 94899 85794, ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளா் தமிழழகன் - 94899 85795, சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளா் கா.ஜெயபால் - 94899 85796, கலவை வட்டாட்சியா் அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளா் க.ஆனந்தன் - 94899 85797, அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பி.என்.உமாபதி - 94899 85798, நெமிலி வட்டாட்சியா் அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளா் எஸ். வெங்கடேசன் - 94899 85799.

இந்த அலுவலகங்களில் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு சந்தேகங்களுக்கு தீா்வு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT