அரக்கோணம்: அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சாா்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நிலைய தீயணைப்பு அலுவலா் ஜி.தெய்வசிகாமணி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது ?, தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது? விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை காப்பாற்றுவது ? என ஒத்திகை மூலம் செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சித்ரா உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், தொழிற்பயிற்றுநா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.