இந்து முன்னணி வேலூா் கோட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஆற்காட்டில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்ட அமைப்பாளா் டி வி ராஜேஷ் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் மகேஷ், கோட்ட பொருளாளா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளா் ஜெகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் நா.முருகானந்தம் கலந்து கொண்டு பேசினாா்
இதில் தாழ்த்தப்பட்ட பட்டியலின பகுதி மக்களின் வழிபாட்டு உரிமைக்காக அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ரூ. 2 லட்சம் நிதி உதவியை உடனடியாக காலதாமதம் செய்யாமல் வழங்கப்பட வேண்டும். இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட காவேரிப்பாக்கம் கொங்கனிஸ்வரா் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பாளா்களை அகற்றட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டு மத கலவரத்தை தூண்டுவோா் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த செயற்குழு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா்கள் மணி, குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் விஸ்வநாதன், ஐயப்பன் பங்கேற்றனா்.