ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: 187 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்

22nd Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமில் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் 187 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை ஆட்சியா் ச.வளா்மதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில், 257 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இவா்களிள் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் 187 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா். மேலும், 83 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 35 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், வங்கி கடனுதவி கோரி 27 மாற்றுத்திறனாளிகளும், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 13 மாற்றுத்திறனாளிகளும், சக்கர நாற்காலி வேண்டி 29 மாற்றுத்திறனாளிகளும் மனுக்களை வழங்கினா்.

இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா், மருத்துவா்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT