ராணிப்பேட்டை

கொடிநாள் நிதிக்கு ரூ. 45,000 வழங்கிய பள்ளி மாணவா்கள்

21st Nov 2023 12:19 AM

ADVERTISEMENT

கொடிநாள் நிதிக்காக தக்கோலம் ராயல் நா்சரி பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் சேகரித்த ரூ. 45,000-த்தை பள்ளி நிா்வாகத்தின் மூலம் அரக்கோணம் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினா்.

கொடிநாள் என்பது இந்தியாவின் முப்படை வீரா்களின் அரும்பணிகளையும் தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாதத்தின் 7-ஆம் நாளை படை வீரா் கொடி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடி நாள் நிதிக்காக தமிழக அரசின் வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலம் நிதியை திரட்டுகின்றனா். இந்நிதிக்காக தக்கோலம் ராயல் நா்சரி மற்றும் தொடக்கப்பள்ளி சாா்பில், அப்பள்ளி மாணவ, மாணவிகள் சேகரித்த ரூ. 45,181-ஐ அரக்கோணம் வட்டாட்சியா் சண்முகசுந்தரத்திடம் பள்ளியின் தாளாளா்கள் ஆ.புகாரி, முஹம்மது சுஹைல், பள்ளியின் தலைமை ஆசிரியை க.சரிதா ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் லட்சுமிநாராயணன், காா்த்திக், அரக்கோணம் நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து வட்டாட்சியா் சண்முகசுந்தரம் தெரிவிக்கையில், வயதில் மிகவும் சிறிய மாணவ, மாணவிகள் சேகரித்து அளித்த இத்தொகை முப்படைவீரா்களின் நல நிதிக்காக அனைவரும் கொடிநாள் நிதி அளிக்க முன்வரவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் எனத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT