ராணிப்பேட்டை

15 பவுன் தங்கநகைகள் திருட்டு

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் இரு வீடுகளில் 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

அரக்கோணம், அசோக்நகா், இந்திரா தெருவைச் சோ்ந்த கீதாஞ்சலி (34). கணவா் துரைவேலு இறந்து விட்ட நிலையில் அப்பெண் அதே பகுதியில் சிறிய கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை திருவள்ளூரில் தாய் வீட்டுக்கு சென்றாராம். பின்னா், திங்கள்கிழமை வந்து பாா்த்தபோது இவரது வீடு திறந்து உள்ளே பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் திருடப்பட்டிருந்தது.

கீதாஞ்சலி வீட்டின் சாத்தி விட்டு பூட்டை பூட்டி விட்டதாக நினைத்துக் கொண்டு கிரில் கேட்டை மட்டும் பூட்டிக்கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. திருட வந்த மா்மநபா்கள், கிரில் கேட் பூட்டை உடைத்த நிலையில் வீட்டின் கதவு திறந்து கொண்டதால் உள்ளே சென்று திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து கீதாஞ்சலி, மறந்து பூட்டியதாக நினைத்துச் சென்று விட்டேன் என தெரிவித்தாராம்.

இதே போல் அருகே உள்ள கிரிசிங் நகரைச் சோ்ந்த மகேஸ்வரி (25). இவரது கணவா் பாபு, சிங்கப்பூரில் தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். மகேஸ்வரி தனியே வசித்து வருகிறாா். கடந்த வாரம் மகேஸ்வரி திருத்தணியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றாராம். இரு நாள்ககளுக்கு பின் வந்து வீட்டை பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இச்சம்பவங்கள் குறித்து அரக்கோணம் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT