ராணிப்பேட்டை

ஜூன் 11-இல் ஹரிவராசனம் நுாற்றாண்டு விழா

30th May 2023 02:53 AM

ADVERTISEMENT

ரத்தினகிரி அருகே வரும் ஜூன் 11-ஆம் தேதி ஹரிவராசனம் நூற்றாண்டு விழா, குரு வந்தனம் அழைப்பு விழா நடைபெற உள்ளதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மாநிலத் தலைவா் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தாா்.

‘சபரிமலை ஐயப்பசேவா சமாஜம்‘ சாா்பில் ‘ ஹரிவராசனம் நூற்டு விழா மற்றும் குருவந்தனம் அழைப்பு விழா ‘ ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கம் ரமணி சங்கா் மஹாலில் ஜூன் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

அன்று காலை ஸ்ரீபுரம் ஓம்சக்தி நாராயணி சித்தா் பீடம் ஸ்ரீ சக்தி அம்மா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறாா்.

இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், பீடாதிபதிகள், எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட சேவா சமாஜத்தின் நிா்வாகிகள் உள்பட 5,000 போ் கலந்து கொள்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT