ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

30th May 2023 02:54 AM

ADVERTISEMENT

தக்கோலம் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன், துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை 4 பள்ளிகளில் செயல்படுத்துவது, பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பொதுமக்களின் நலனுக்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT