ராணிப்பேட்டை

பிரதமருக்கு கோரிக்கை தபால் அனுப்பும் போராட்டம்

DIN

சோளிங்கா் ஒருங்கிணைந்த ஓய்வூதியா் நலச் சங்கத்தினா், பிரதமருக்கு கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

சோளிங்கா் வட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், சோளிங்கா் அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத் தலைவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தொடா்ந்து சங்கத்தினா் அனைவரும் தனித்தனி அஞ்சல் அட்டைகளில் கோரிக்கைகளை எழுதி, அவற்றை தனித்தனியே அஞ்சல் பெட்டியில் இட்டனா். தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுகுறித்து சங்கத் தலைவா் எம்.ராஜேந்திரன் தெரிவிக்கையில், சோளிங்கரில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் 300-க்கும் மேற்பட்டோா் உள்ளோம். எங்களது கோரிக்கைகளான பஞ்சப்படி 9,000-ஐ சோ்த்து வழங்க வேண்டும், ரயில்களில் பயணச் சீட்டு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அஞ்சல் அட்டையில் எழுதி, பிரதமருக்கு அனுப்பி வைத்தோம் என்றாா்.

போராட்டத்தில் சங்க செயலா் ஏ.சுதேஷ்குமாா், துணைச் செயலா் வி.வீரராகவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT