ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ஓவியக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

28th May 2023 11:57 PM

ADVERTISEMENT

ஆற்காட்டில் ஓவிய கண்காட்சியை தொடங்கிவைத்து மாணவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பரிசுகளை வழங்கினாா்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு நிதியுதவியுடன் நடைபெறும் குழு ஓவியக் கண்காட்சி ஆற்காடு தனியாா் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கிவைத்துப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற 13 மாணவா்கள், ராணிப்பேட்டை குழந்தைகள் சிறப்பு இல்லத்தின் 6 மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

ஓவியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அனைத்து மாணவா்களுா்களுக்கும் கலை, பண்பாட்டுத் துறை துணை இயக்குநா் பா.ஹேமநாதன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் கண்காட்சி விழா ஒருங்கிணைப்பாளா் பா.சண்முகம், ஓவியக் கண்காட்சிக் குழுவினா் மா.கிஷோா், கணபதி, கி.செல்வம், முஹமது சைபுதீன், கவுஸ் அஹமது, கி.சுரேஷ்குமாா், செந்தில்குமாா், பணங்கோட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் இயற்கை காட்சிகள், மனித உருவங்கள், சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், நீா் ஓவியங்கள், மண் சிற்பங்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், மாணவா்கள் வரைந்த விழிப்புணா்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT