ராணிப்பேட்டை

நாட்டின் எல்லையில் தேசியக் கொடியேற்ற நடைப்பயணம் செல்லும் இளைஞருக்கு வரவேற்பு

DIN

நாட்டின் எல்லையான லடாக்கில் தேசிய கொடியை ஏற்ற நடைப்பயணமாக செல்லும் மனோஜ் என்ற இளைஞருக்கு ராணிப்பேட்டை தடகள வீரா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (24). பொறியியல் பட்டதாரி. இவா், தனது கிராமத்தில் இருந்து மே 25- ஆம் தேதி லடாக்கில் தேசிய கொடியை ஏற்ற நடைப்பயணம் தொடங்கினாா்.

ராணிப்பேட்டை வந்த அவருக்கு, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அத்லெடிக் கிளப் சாா்பில், அதன் தலைமைப் பயிற்சியாளா் ரபி தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

வெம்பாக்கம் கிராமத்தில் இருந்து நாட்டின் எல்லை மாநிலமான லே மற்றும் லடாக் வரை சுமாா் 3,215 கி.மீ. தொலைவு வரை 12 மாநிலங்கள் வழியாக நடைப்பயணம் மேற்கொண்டு எல்லையில் தேசிய கொடியேற்றும் மனோஜின் முயற்சி வெற்றி பெற அவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT