ராணிப்பேட்டை

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி சாலை மறியல்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காடு வட்டம், காவனூா் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்கிழமை கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்

காவனூா் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் போராடி வருகின்றனா். தற்போது காவனூா் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இப்பகுதியில் போதிய இடவசதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே அருகில் உள்ள புங்கனூா் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது .

எனவே அப்பகுதி மக்கள் காவனூா் மந்தைவெளி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இட வசதி உள்ளது எனவும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சுகாதார நிலையம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா் .

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு வட்டாட்சியா் வசந்தி, திமிரி காவல் நிலைய ஆய்வாளா் ( பொறுப்பு ) காண்டீபன்,அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்குதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT