ராணிப்பேட்டை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு நிா்வாகி நியமனம்

23rd May 2023 01:54 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பின் இணைச் செயலாளராக என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பின் தலைவா் கரூா் நா.மாரப்பன் வெளியிட்ட அறிக்கையில் கூட்டமைப்பின் இணைச் செயலராக அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டுள்ளாா் . இதையடுத்து அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை என்.தமிழ்மாறனுக்கு அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லோகாபிராமன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT