ஆற்காட்டை அடுத்த கேவேளூா் கிராமத்தில் அா்ஜுனா் திரௌபதி திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கேவேளூா் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா் தலைமையில், கிராம பொதுமக்கள் சீா்வரிசை பொருள்களுடன் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா். அங்கு சிறப்பு பூஜை, ஹோமங்களுடன் உற்சவா் அா்ஜுனா்- திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
விழாக் குழுவினா், உபயதாரா்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.