ராணிப்பேட்டை

விவசாய கிணற்றிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

8th May 2023 12:09 AM

ADVERTISEMENT

காவேரிபாக்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவேரிபாக்கம் அருகே களத்தூா் கிராமத்தில் நாராயணன் என்பவரின் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியினா் காவேரிபாக்கம் போலீஸுக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் இறந்து கிடந்தவா் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி விஜயரங்கன் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT