ராணிப்பேட்டை

நாட்டு பட்டாசு தயாரித்த வீட்டில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

8th May 2023 12:09 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையில் நாட்டு பட்டாசு தயாரித்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வாலாஜாபேட்டை ஆசிரியா் காலனி பகுதியில் அனுமதியின்றி வீட்டில் செயல்பட்ட வந்த நாட்டு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வீடு முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இதில், சுரேஷ் (42), ராஜேந்திரன் (36) ஆகிய இருவா் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தீ விபத்து குறித்தும், அனுமதியின்றி வீட்டில் செயல்பட்ட வந்த நாட்டு பட்டாசு தயாரிப்பு குறித்தும் வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT