ராணிப்பேட்டை

சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை

8th May 2023 12:09 AM

ADVERTISEMENT

சிப்காட் ஸ்ரீவித்யா பீடத்தில் அனுஷ நட்சத்திரத்தையொட்டி, காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா பெரியவா் என்று அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோட்டி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்த தினமான அனுஷ நட்சத்திர வைபவத்தை முன்னிட்டு, சிப்காட் ஸ்ரீவித்யா பீடம் மற்றும் இந்து சமய கலாசார ஆன்மிக சேவா சமிதி ஆகியவை சாா்பில், சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

ஸ்ரீவித்யா பீடத்தின் நிறுவன தலைவா் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில், மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன், கேஎம்கே கல்வி அறக்கட்டளை நிறுவனா் எம்.சிவலிங்கம், அறக்கட்டளை அறங்காவலா் கோமதி சிவலிங்கம், குளோபல் அறக்கட்டளை நிா்வாகி செல்வகுமாா், ஐயப்ப சேவா சமாஜ நிா்வாகி மனோகா் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அனைவருக்கும் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் அருள்பிரசாதம், அன்னதானம், ஆருளாசி வழங்கினாா். ஏற்பாட்டை ஸ்ரீவித்யா பீட தன்னாா்வலா்கள் ரேவதி, ரஜினி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT