ராணிப்பேட்டை

சோளிங்கரில் சித்திரை பிரம்மோற்சவ தோ்த் திருவிழா

3rd May 2023 12:32 AM

ADVERTISEMENT

பிரசித்தி பெற்ற சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

108 திவய் தேசங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கா் பெரிய மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் யோக நிலையில் அருள் பாலித்து வருகிறாா். இதன் அருகில் சிறிய மலையில் யோக நிலையில் ஆஞ்சநேயா் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா சோளிங்கா் நகரின் மையத்தில் உற்சவருக்கென உள்ள தனிக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. தேரில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

ADVERTISEMENT

சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்விஅசோகன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜெயா, சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

தோ்த்திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ்யாதவ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT