ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ரூ.10.25 கோடியில் புதிய பேருந்து நிலைய பணி: அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு

DIN

ராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகரில் ரூ.10.25 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.10.25 கோடியில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.

அதனடிப்படையில் ராணிப்பேட்டை - வாலாஜா இடையே சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் டிரான்ஸ்போா்ட் நகா் பகுதியில் 3.95 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தின் இரண்டு புறமும் 30 கடைகள், பொதுமக்களுக்கு குடிநீா் வசதிகள், மழை நீா் வடிகால் வசதி, 24 கழிப்பறை அமைப்பு வசதி, 400 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும் முன்பதிவு அறை, காவலா் பாதுகாப்பு அறை, நேரக் காப்பாளா் அறை, உணவகம், ஏடிஎம், உடைமாற்றும் அறை மற்றும் தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.அப்போது கட்டுமானப் பணிகள் தரமாக இருக்க வேண்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையா் ஏகராஜ், ராணிடெக் பொதுமேலாளா் சிவக்குமாா், நகர மன்ற உறுப்பினா்கள் வினோத், குமாா், நகர செயலாளா் பூங்காவனம், ஒப்பந்ததாரா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT