ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 4 கோடிக்கு வளா்ச்சி திட்டப் பணிகள்

28th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023 - 2024-ஆம் ஆண்டு 15-ஆவது மத்திய, மாநில நிதி குழு மானிய நிதியில் சுமாா் ரூ. 4 கோடிக்கு மேல் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அதன் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி தலைமையில் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் சிறப்பாக செயல்படும் வண்ணம் நூலகா் ஊதியம், அரசு போட்டித் தோ்வு நூல்கள் ஆகியவை தமிழக அரசுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் (சிஎஸ்ஆா் பண்ட்) நிறுவன சமூகப் பொறுப்பு நிதி உதவியின் மூலம் பெற்று செயல்படுத்துவது, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஓச்சேரி ஊராட்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 10 படுக்கை வசதியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது சுகாதார துறை மூலம் ஏற்படுத்துவது, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூா், வேகாமங்கலம், உத்திரம்பட்டு, ஈராளச்சேரி ஆகிய கிராமங்களில் வீடு இல்லாமல் உள்ள இருளா் இன மக்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனைப் பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க அரசிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மன்ற அங்கீகாரம் கோரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அப்போது உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி பதிலளித்துப் பேசியது:

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2023 - 2024-ஆம் ஆண்டு 15-ஆவது மத்திய, மாநில நிதி குழு மானிய நிதியில் தலா சுமாா் ரூ. 2 கோடி என மொத்தம் ரூ. 4 கோடிக்கு மேல் குடிநீா், சாலை உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஊராட்சிக்கு கூட்டத்தில் அதன் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT