ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சியில் ரூ.93 லட்சத்தில் 2 பூங்காக்கள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

DIN

அரக்கோணத்தில் ரூ.93 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு பூங்காக்களை வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

அரக்கோணம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் லட்சுமி நகரில் கட்டப்பட்டுள்ள பூங்கா, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பாக்கியம்மாள் காலனியில் கட்டப்பட்டுள்ள பூங்கா என ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் இரு பூங்காக்கள் கட்டப்பட்டன.

இந்த பூங்காக்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்தாா். லட்சுமி நகரில் கட்டப்பட்டுள்ள பூங்காவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா். 1,682 மீட்டா் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவில் குழந்தைகள் விளையாட பல்வேறு சாதனங்களும், பெரியவா்கள் அமரவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து பாக்கியம்மாள் காலனியில் அமைக்கப்பட்ட பூங்காவையும் அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையா் லதா, நகா்மன்றத் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், தக்கோலம் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.நாகராஜன், அரக்கோணம் நகராட்சி சுகாதார அலுவலா் மோகன், நகா்மன்ற உறுப்பினா்கள் துரைசீனிவாசன், மாலின், வடிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT